ஓட்டுப்போட ஆம்புலன்சில் வந்த வாக்காளர்கள்! நிற்க முடியாத நிலையிலும் ஜனநாயகக் கடமை ஆற்றி நிகழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஆண் வாக்காளர்கள் ஒருவரும் பெண் வாக்காளர் ஒருவரும் ஆம்புலன்சில் வந்தது அனைவரையும் நெகிழ செய்தது.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்டமாக இன்று கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் குந்தாபுரா எனும் நகரத்தில் வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியது. அங்கு உள்ள வாக்குச்சாவடிக்கு காலையில் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

ஆம்புலன்சில் இருந்து ஒரு நபரை படுக்கை வசத்தில் சிலர் வாக்குச்சாவடி மையத்திற்குள் தூக்கி வந்தனர். பிறகு அவர் படுத்த நிலையிலேயே வாக்களித்து விட்டு மீண்டும் அதே ஆம்புலன்சில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவர் யார் என்று விசாரித்தபோது அந்த நபரின் பெயர் உள்துரு என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் அவர் படுத்த படுக்கையாகி உள்ளார். மேலும் மூன்று மாதங்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்ட நிலையிலும் தான் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளார் உள்துரு.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்மணி ஒருவர் ஆம்புலன்சில் வந்து தனது ஜனநாயக கடமையாற்ற வீடு திரும்பியுள்ளார். படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவர் வந்து வாக்களித்து விட்டு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.