வாக்குப்பதிவு இயந்திரத்தை சுத்தியலால் அடித்து உடைத்த வாக்காளர்! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுத்தியலால் அடித்து உடைத்த ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் எனும் பள்ளிக்கு ஆசைத்தம்பி எனும் வாக்காளர் தனது மனைவியுடன் வந்திருந்தார். பூத் ஸ்லிப்பை காட்டி உள்ளே சென்ற ஆசைத்தம்பி தனது கை விரலில் மையையும் வைத்துக் கொண்டார். பிறகு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு ஆசைத்தம்பி சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் திடீரென டமார் என்று ஒரு சப்தம் கேட்டது. இதனைக் கேட்டு அதிர்ந்து போன வாக்குப் பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகள் ஓடிச்சென்று ஆசைத்தம்பி நின்று கொண்டிருந்த இடத்தில் பார்த்தனர். அப்போது அவர் தனது கையில் சுத்திகள் ஒன்றை வைத்திருந்தார். மேலும் வாக்குப்பதிவு எந்திரமும் லேசாக சேதமடைந்திருந்தது. 

இதனைப் பார்த்து அந்த நபர் சுத்தியலால் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து விட்டதாக கூறி போலீசார் அதிகாரிகள் உள்ளே அழைத்தனர். ஆனால் அதற்குள் ஆசை தம்பியின் மனைவி ஏதோ தெரியாமல் செய்து விட்டார் என்று அதிகாரிகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். போலீசார் வந்து ஆசைத்தம்பி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

பிறகு தான் தெரிந்தது ஆசைத்தம்பி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் திட்டமிட்டு அதனைச் செய்யவில்லை என்றும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனை எடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.