சமந்தாவுடன் நெருக்கமாக பிராக்டிஸ்! என் கணவர் ஒரு பிராடு! விஜே மணிமேகலை ஷாக் தகவல்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் மணிமேகலை தன்னுடைய கணவரை பிராட் என்று கேலியாக பதிவு செய்துள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் மணிமேகலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவரது திருமணம் இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி நடைபெற்றது. 

மணிமேகலை கணவர் உசைன் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனர் பணியை மேற்கொண்டு வருகிறார். இன்னிலையில் சமந்தாவிற்கு அவருடைய இடுப்பில் கை வைத்து நடனம் கற்றுத் தரும் விதமாக ஒரு புகைப்படம் ஒன்றை அவரது மனைவி மணிமேகலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்சனாக "ஃபிராடு" என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், "என்ன உங்களுக்கு வயிறு எரிகிறதா ? "என்று கேலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.