விவோ வின் அதிரடியான வசதியடன் IQ00 கேமிங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.

விவோ வின் துணை நிறுவனமான IQ, IQ00 என்ற புதிய வகை ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இதுவே இந்நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட் போன் ஆகும்.


6.41 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் போனில்  Snapdragon 855 பிராசசர், ஹைப்ர் லிக்விட் கூலிங் சிஸ்டம்,  வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவை உள்ளன


ஆண்ட்ராய்டு பை இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், 4 கட்டமைப்புகளில்  கிடைக்கிறது.

கேமெராவை பொறுத்தவரையில் 13  எம்.பி முன்பக்க கேமெரா மற்றும் 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX363 சென்சார், 13 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. சென்சார்கேமெராவும் அடங்கும்.  இதன் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்.


மேலும் 4D தரத்தில் கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரெஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.


Vivo IQ00 விலை நிலவரம் :

6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி   = ரூ.31,740

8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி   = ரூ.34,910

9 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. மெமரி   = ரூ.38,090

12 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. மெமரி =  ரூ.45,500