பாண்டியா திறமை வேறு எந்த வீரருக்கும் இல்லை! அதிரடி நாயகன் சேவாக் வீசிய அணுகுண்டு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், அதிரடி ஆட்டக்காரர் ஹர்டிக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி வீரர் ஹர்டிக் பாண்டியாவிற்கு மாற்று வீரர் வேறு யாருமமே  இல்லை என விரேந்தர் சேவாக் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் ஹர்டிக் பாண்டியாவிற்கு இணையாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வேறு யாருமே நிகர் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹார்டிக் பாண்டியா நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் முத்திரை பதிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். அப்படியே அவருக்கு நிகராக யாரேனும் அணியில் எடுக்கப்பட்டாலும், ஹர்டிக் பாண்டியாவின் இடத்தை யாராலும் அசைக்க முடியாது எனவும் சேவாக் கூறியுள்ளார். 

ஹார்டிக் பாண்டியா இந்த வருடம் நடந்த ipl தொடரில் 15 போட்டிகளில் 402 ரன்களை விளாசியுள்ளார். இந்த தொடர் முழுவதும் அவரின் ஸ்டெரைக் ரேட் 191.42 என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி ipl கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.