உருவத்தில் குட்டை..! கால்கள் கிடையாது! நெடு நேரம் காத்திருந்த ரசிகையை நெகிழ வைத்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி இந்தூரில் தன் ரசிகை ஒருவரை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியையும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உலகில் உள்ள பல்வேறு ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

இதனைத்தொடர்ந்து விராட் கோலியை பார்ப்பதற்காக அவரது மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவர் நீண்ட நேரம் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார் . அவரைப் பார்த்தவுடன் விராட் கோலி பேச ஆரம்பிக்கிறார். உடனே அந்த ரசிகை தன் கையில் இருந்த தொப்பியை விராட்கோலி இடமளித்து ஆட்டோகிராப் கேட்கிறாள். 

ஆட்டோகிராப் போட்ட பின்பு இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர் . இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விராட் கோலியின் ரசிகை பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களோடு உரையாடுவது மற்றும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது என்பது விராத் கோலிக்கு ஒன்றும் புதிதல்ல இதேபோல் இதற்கு முன்பாக பல இடங்களில் தன் ரசிகர்களுடன் விராட் கோலி தனது நேரத்தை செலவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.