உலகம் முழுவதும் ஆலயங்கள் கொண்ட விநாயகர்!

தமிழகம் மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் விநாயகரை மக்கள் வணங்கி வருகின்றனர்.


மியான்மரில் உள்ள புத்த மடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடப்படுகின்றன. 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான விநாயகர் கோவில்கள் சிங்கப்பூரில் உள்ளன.

இந்தோனேசியாவிலும் விநாயகருக்கு ஆலயங்களில் தனி சன்னதி உண்டு . அங்குள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .இந்தோனேஷியாவில் உள்ள மக்களும் விநாயகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபிக்கப் படுகிறது .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நேபாளம் நாட்டில் விநாயகர் வழிபாடு தொடங்கப்பட்டுவிட்டது .இதுமட்டுமில்லாமல் இலங்கை எகிப்து மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் விநாயகர் வழிபாடு விமர்சையாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .