பெண் வீட்டுக்காரர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள்! திருமணமாகாத இளைஞர்கள் வைத்த ருசிகர பேனர்!

திருமணத்தை தடுத்து நிறுத்துபவர்களுக்கு எதிராக இளைஞர்கள் பேனர்கள் அடித்ததால் இரணியனின் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இரணியல் அருகே தலக்குளம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்டது புதுவிலள மேம்பாலம். நேபாளத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மீது நேற்று விசித்திரமான பேனர் ஒன்று தொங்கபட்டிருந்தது.

அதில் தாம்பூலம், மாவிலை பழங்கள் முதலியன இடம் பெற்றிருந்ததால் மக்கள் அதனை காண்பதற்கு ஆர்வமாக வந்தனர். அந்த பேனரில் புதுவிளை பகுதியின் இளைஞர்களின் மன குமுறல்கள் வெளிப்படுத்த பட்டிருந்தன. அதாவது, "புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி. இந்த செயலானது மேலும் தொடர்ந்தால், தடுப்பவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியன ஆதாரத்துடன் வெளியிடப்படும். வரன்களை தடுப்பவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரப்படும். இப்படிக்கு திருமண வரன் தேடும் புதுவிளை இளைஞர்கள்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது புதுவிளை இளைஞர்களுக்கு வரும் வரனை ஊர் பொதுமக்கள் சிலர் அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பி ஊருக்குள்ளே வரவிடாமல் தடுக்கின்றனர். இதனால் பல இளைஞர்களின் வாழ்க்கை தடம் புரண்டது. எனவே தங்கள் மன குமுறல்களை எளிதில் வெளிப்படுத்துவதற்காக பேனர்கள் அடித்துள்ளனர் என்று கூறினார்.

இது போன்ற டிஜிட்டல் பேனர்கள் அம்மாண்டிவிளை, வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த சம்பவமானது இரணியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.