முகத்தில் மாஸ்க்குடன் விஜயகாந்த்..! அருகே மாலையும் கழுத்துமாக மணமக்கள்..! கேப்டன் வீட்டில் நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேமுதிக கட்சி தொண்டர் ஒருவருக்கு விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.


கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி உலக நாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து வருகிறது. இதில் இந்தியாவும் தப்பவில்லை. நம்முடைய நாட்டிலும் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோய் தொற்றிலிருந்து நம்மை பார்த்துக் கொள்வதற்காக அரசாங்கம் சோசியல் டிஸ்டன்ஸிங் என அழைக்கப்படும் சமூக விலகலை கடைபிடிக்குமாறு கூறியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை பள்ளி வைக்குமாறும் மத்திய அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தேமுதிக கட்சி தொண்டரான விமல் கட்சித் தலைவரான விஜயகாந்த் முன்னிலையில் அவரது இல்லத்தில் கமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் பெற்றோர் மற்றும் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். விஜயகாந்த் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார்.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மதித்து விஜயகாந்த் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திருமணவிழாவில் சனிடைசர்கள் மாஸ்க்குகள் ஆகியவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று விஜயகாந்த் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது பார்த்து அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.