தமிழகத்தில் தலைமைக்கட்சியான அ.தி.மு.க.வை கூட்டணிக் கட்சியினர் எத்தனை தூரம் கேவலப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் அவமானப்படுத்தி வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் விஜயபிரபாகரனும் சேர்ந்து எடப்பாடி மீது கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
பா.ஜ.க.வை தொடர்ந்து கூட்டணியை உடைக்கிறாரா விஜயகாந்த் பிள்ளை? இடைத்தேர்தலில் நிற்கப் போறாராம் விஜயபிரபாகரன்!
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டுமே அ.தி.மு.க. போட்டியிட்ட இடங்கள். அதனால் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கொடுப்பதுதான் நடைமுறை. ஆனால், திடீரென நாங்குநேரில் எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க. போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்த நிலையில் திடீரென விக்கிரவாண்டி தொகுதியை குறிவைத்து விஜயபிரபாகரன் பேசிய விவகாரம் அ.தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் நலம் பெறுவதற்காக குன்றத்தூரில் தேமுதிக சார்பில் 508 பால்குடம் எடுக்கப்பட்டது.
அப்போது பேசிய விஜயபிரபாகரன், “தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேமுதிக தலைமை கூறினால் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். தலைமை சொல்லுக்குக் கட்டுப்படுவேன். இதில் பயம் என்பதற்கோ, முடியாது என்பதற்கோ இடமில்லை’’ என்று கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் லட்டு போன்று நான்கு சீட்கள் இருந்தபோது போட்டியிடுவது பற்றி வாயைக்கூட திறக்காத விஜயபிரபாகரன், இப்போது பேசியிருப்பது அ.தி.மு.க.வில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா தேறி வர்றதுக்குள்ள கட்சியை காலி செய்யாம விட மாட்டாங்களோ..?