தலைவர் கூடவே போகனும்ப்பா..! கேப்டன் காரை பின்தொடர்ந்த தேமுதிக பிரமுகருக்கு நேர்ந்த பயங்கரம்!

தேமுதிக மாணவர் அணி நிர்வாகி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவமானது விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விக்ரவாண்டி தொகுதியில் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விக்கிரவாண்டி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விக்ரவாண்டி தொகுதியில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தை வழிநெடுக வரவேற்றனர். பட்டாசுகளை வெடித்தும், மலர் தூவியும் விஜயகாந்தை தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் பகுதியில் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அச்சரப்பாக்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயசூரியா என்பவர் தன்னுடைய தந்தையான தமிழ்குமரன் என்பவருடன் தனது காரில் விஜயகாந்தின் காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

தொழுப்பேடு என்னும் இடத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்பின் மீது வேகமாக மோதியது. மோதி அதிர்ச்சி சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா உயிரிழந்தார். தமிழ்குமரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஜெயசூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசியல் தலைவர்களில் பிரச்சாரத்தை முடிக்கும் போது "பாத்து போயிட்டு வாங்க" என்று கூறும் விஜயகாந்தின் கூட்டத்தில் கட்சி நிர்வாகி இறந்திருப்பது விக்கிரவாண்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது விக்ரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.