ரசிகர்களிடம் டென்சன் ஆன விஜய்சேதுபதி! படவிழாவில் பரபரப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னை வரவேற்பதற்காக பட்டாசு வெடித்த தன்னுடைய ரசிகர்கள் மீது கோபம் கொண்டார்.


நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம்தான் துக்ளக் தர்பார் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கியுள்ளார்.

ஒரு திரைப்படத்துக்கான பூஜை ஏற்பாட்டு விழா, வடபழனியில் உள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு சொந்தமான மண்டபம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி , நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக விஜய் சேதுபதி  வந்தபோது அங்கிருந்த அவரது அவர்களின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடினர் . இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல்  நிலவியது .

இதனையடுத்து நிகழ்ச்சியின்போது பேசிய விஜய் சேதுபதி , தன்னுடைய ரசிகர்கள் இந்த விதமாக பட்டாசுகளை வெடித்து அது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிப்பதாக கூறினார்.

இவர்கள் செய்த இந்த செயலால் பொதுமக்களுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.