விஜயை வைத்து மாஸ்டர் படம் எடுத்து கடனாளியான தயாரிப்பாளர்..! ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..! ஆனால்?

மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதால் கடனில் சிக்கித் தவிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கியிருந்த தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடித்துத் தருவதாக நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகவிருந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எந்த தகவலும் இல்லாததால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையால் இந்த திரைப்படத்தை பிரபல OTT நிறுவனம் பெரும் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதால் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் வாங்கியுள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இதனால் அவர் கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். இதனை அறிந்த நடிகர் விஜய் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தருவதாக கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.