மதுரை ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று சமைத்துப் போட்ட விஜயின் தாய் ஷோபா.! நெகிழ வைக்கும் காரணம்!

தளபதி விஜயின் பெற்றோரான எஸ்ஏசி மற்றும் ஷோபா ஆகிய இருவரும் இணைந்து தங்களுடைய மகன் மற்றும் சினிமா நடிகருமான விஜய்யின் தீவிர ரசிகரை நேரில் சென்று அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கின்றனர்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் என்று நம்மால் நிச்சயமாக கூற இயலும். அந்த வகையில் எல்லா வயதினரையும் தன்வசப்படுத்தி தனக்கு ரசிகர்களாக்கிய பெருமையை நடிகர் விஜய் பெற்றிருக்கிறார். படத்திற்கு படம் இவருக்கு ரசிகர்கள் அதிகரிப்பதை போலவே பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குவிக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இதற்காக விஜய்க்கு பல இடங்களில் ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக தீவிர ரசிகராக வலம் வருபவர் தான் மதுரையை சேர்ந்த மகேஷ். இவர் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகர் . அவரது இல்லத்திற்கு விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவரும் இணைந்து திடீரென்று சர்ப்ரைசாக விஜயம் செய்துள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் தாயார் ஷோபா மகேஷின் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு சமைத்து இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மகேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் . உச்சத்தில் இருக்கும் நடிகரின் பெற்றோர் ஒரு ரசிகர் இல்லத்தில் இவ்வளவு எளிமையாக நடந்து கொண்டதைப் பார்த்த இணையதள வாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர் . மேலும் நடிகர் விஜயையும் அவரது பெற்றோரையும் கமென்ட் செய்துள்ளனர்.