குடிபோதையில் பாகுபலி நடிகருடன் விஜய் டிவி டிடி உல்லாசம்..! வெளியான தகவலின் உண்மை பின்னணி இது தான்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.


தமிழில் முன்னணி தொலைக்காட்சி பட்டியலில் இடம் பெற்றுள்ள விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆவார்.

 அதிலும் "காபி வித் டிடி" என்ற நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் நேர்காணலில் பங்கேற்பதில் வல்லவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளர் பணியை செய்து வரும் திவ்யதர்ஷினி தற்போது திரைப்படங்களிலும் சில வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த சில காலத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும் டிடி தன்னுடைய கேரியரை மிகவும் கவனமாக எடுத்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிடி கடந்த சில காலமாகவே பல விதமான சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது டிடி ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ராணாவுடன் இணைந்து இரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார் டிடி. அப்போது குடித்துவிட்டு குடிபோதையில் ராணாவுடன் உல்லாசமாக நடனமாடும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு வெளியானதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல செய்தித்தாள் ஒன்றில் தெலுங்கு நடிகருடன் போதையில் திவ்யதர்ஷினி உல்லாசம் வேண்டும் செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் உண்மையில் டிடி ஒரு கிரிக்கெட் போட்டியை ராணாவுடன் கண்டுகளித்துள்ளார். அங்கு போதையில் இருக்க வாய்ப்பில்லை.


மேலும் ராணாவை தனது அண்ணன் என்று குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் டிடி. எனவே வழக்கம் போல் டிடி - ராணாவை மையமாக வைத்து இப்படி ஒரு கிசுகிசுவை கிளப்பிவிட்டுள்ளனர்.