விவசாயத்துக்கு கடன் கிடைக்காமல் அள்ளாடிய விவசாயி! நேரில் சென்று நெகிழச் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

நெல் பயிரிடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த விவசாயிக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் உதவியுள்ளது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.


சங்கராபுரம் பகுதிக்கு அருகேயுள்ள சிவபுரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட முயன்றுள்ளார். ஆனால் வறுமையினால் வட்டிக்கு பணம் கேட்டு அறைந்துள்ளார்.

இவர் வட்டிக்கு பணம் கேட்டு அலைவதை சிவபுரம் பகுதியில் உள்ள நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் தாமாகவே முன்வந்து பிரகாஷுக்கு உதவி செய்ய முடிவெடுத்தனர். பயிரிடுவதற்கான முதற்படியாக 10,000 ரூபாயை பிரகாஷை தேடி சென்று கொடுத்துள்ளனர்.

அப்பகுதியில் மிகவும் காய்ந்து கிடந்த பிரகாஷின் வயலை அவர்கள் டிராக்டர் மூலம் உழுது கொடுத்தனர். பின்னர் உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான இதர செலவுகளையும் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். 

இதற்கு நன்றி தெரிவித்து பிரகாஷ் மிகவும் மனம் நெகிழ்ந்தார். 

தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படத்திற்காக பாலபிஷேகம், கட்டவுட், பேனர்கள் முதலியவற்றை வைக்கும் ரசிகர்களின் மத்தியில் மேற்கூறப்பட்ட ரசிகர்கள் செய்த செயலானது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.