விசிக மிரட்டலுக்கு பயப்படப்போவதில்லை! விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க போவதாக உறுதி செய்துள்ளார்.


நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாயின. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை முரளிதரனையே சாரும். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் விஜய் சேதுபதி அந்த வேடத்தில் நடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் மக்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக பதிவுகளை மேற்கொண்டனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கூட அவர் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு மறைமுகமாக விஜய்சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று அவர் விஜய்சேதுபதியை கேட்டுக் கொண்டார். 

இதனிடையே, அவர் இந்த படத்தில் நடிப்பதை கைவிட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின. நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தன. ஒருவழியாக விஜய் சேதுபதி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் கண்டிப்பாக நடிக்க போவதாக உறுதி அளித்தார். மேலும் யார் மனதையும் புண்படுத்தாத வாறு இந்த படத்தில் தான் நடிக்கபோவதாக கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் பேட்டியானது மீண்டும் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.