ஒரு பாட்டில் மதுவை வாயில் டாக்டர் ஊற்றினோம்! பிறகு 4 பேரும் மாறி மாறி கற்பழித்தோம்! நடுநடுங்க வைக்கும் வாக்குமூலம்!

கால்நடை மருத்துவர் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 4 பேரும் மது அருந்தியிருந்தார்கள் என்பதும் மூச்சு திணறடித்து பிரியங்காவை கற்பழித்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


பிரியங்கா என்ற 26 வயது இளம்பெண் ஹைதராபாத் மாநகரில் வசித்து வருகிறார். இவர் விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கும் வெட்னரி மருத்துவர் படிப்பை முடித்து பணியாற்றி வருகிறார். இவர் ஷம்சாபாத் என்னும் நகரிலிருந்து கச்சிபௌலி எனுமிடத்தில் உள்ள சரும மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதன்படி சில நாட்களுக்கு முன்னர் மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஷம்சாபாத்தில் டோல் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு, கச்சிபௌலி பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இரவு 7:22 மணியளவில் கச்சிபௌலியிலிருந்து டோல் பகுதிக்கு திரும்ப வந்துள்ளார். அப்போது அவருடைய இரு சக்கர வாகனத்தில் பின்டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக லாரி ஓட்டுநர் ஒருவர் பிரியங்காவிடம் கூறியுள்ளார். மேலும், தானே சரி செய்து தருவதாக லாரி ஓட்டுநர் கூறியுள்ளார். எவ்வளவோ முயன்று பார்த்தும் லாரி ஓட்டுநர் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவில்லை.

நிலைமை சரி இல்லாததை உணர்ந்த பிரியங்கா தன்னுடைய சகோதரியான ரம்யாவுக்கு கால் செய்துள்ளார். நிகழ்ந்தவற்றை கூறியவுடன் ரம்யா அவரை டோல் பகுதியில் நிற்குமாறு கூறியுள்ளார். ஆனால் பிரியங்கா தனக்கு மிகவும் பயமாக உள்ளது என்றும், விரைவில் வந்து காப்பாற்றும் மாறும் அழுது புலம்பியுள்ளார். 

ரம்யா தன்னுடைய உறவினர்களுடன் டோல் பகுதியில் சென்று பார்த்தபோது, மாதுரியை காணவில்லை. மேலும் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்துள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதிகாலை 3 மணி வரை மாதுரியை உறவினர்கள் தேடினர். ஆனால் அவர்களால் பிரியங்கா தேடி கண்டுபிடிக்க இயலவில்லை. அதன் பின்னர் ஷாத்நகர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

காலை 7 மணியளவில், அப்பகுதியில் உள்ள சப்வேக்கருகே பிரியங்காவின் சடலத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவருடைய சடலத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ள காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. இதுவரை காவல்துறையினர் இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பிரியங்கா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் அவருடைய கழுத்தை நெரித்து இருந்ததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது அறிகுறிகளும் உள்ளன என்று அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. 4 பேரும் மது அருந்திவிட்டு கற்பழித்து உள்ளதும் தெரியவந்துள்ளது. கற்பழிக்கும் போது வாய் மற்றும் மூக்கை அடைத்து கற்பழித்தால் மூச்சுத்திணறி பிரியங்கா இருந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. மேலும் 4 பேரும், அருகிலுள்ள மதுக்கடையில் 1.5 பாட்டில்கள் மது மற்றும் நொறுக்குத் தீனி வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

கற்பழிப்பதற்கு முன்னதாக ஒரு முழு பாட்டில் மதுவை  பிரியங்கா வாயில் நான்கு பேரும் சேர்ந்து ஊற்றியுள்ளனர். இதனால் தான் மயங்கிய நிலையில் பிரியங்காவால் எதுவும் செய்ய முடியவில்லை. 

இது திட்டமிடப்பட்ட வன்கொடுமை செயலே என்று காவல்துறையினர் உறுதியாகிவிட்டது. ஏனெனில் டோல்கேட் பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த பிரியங்காவை நெடுநேரமாக குற்றவாளிகள் கண்காணித்து வந்துள்ளனர். உதவுவதற்காக சென்று அவரிடம் ஏதோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் லாரி சாரதி மற்றும் அவருடைய உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவர்கள் முகமது ஆரிஃப், ஜொள்ளு நவீன், ஜொள்ளு சிவா என காவல்துறையினர் கூறியுள்ளனர்.  அனைவரும் நாராயணன்பேட்டை எனும் இடத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பிரியங்கா வாகனத்தை நிறுத்தும் போது அவரை பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவரை கற்பழிப்பதற்காக பிளான் செய்துள்ளனர். அதன்படி அவர்கள் திட்டமிட்டு பிரியங்காவை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.