டூ வீலர் பஞ்சர்! உதவிக்கு வந்த லாரி டிரைவர்கள்! சில நிமிடங்களில் சடலமாகி எரிந்த பெண் டாக்டர்! திக் திகில் சம்பவம்!

26 வயது இளம்பெண் சாலையோரத்தில் இறந்து கிடந்த சம்பவமானது ஹைதராபாதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாதுரி என்ற 26 வயது இளம்பெண் ஹைதராபாத் மாநகரில் வசித்து வருகிறார். இவர் விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கும் வெட்னரி மருத்துவர் படிப்பை முடித்து பணியாற்றி வருகிறார். இவர் ஷம்சாபாத் என்னும் நகரிலிருந்து கச்சிபௌலி எனுமிடத்தில் உள்ள சரும மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதன்படி சில நாட்களுக்கு முன்னர், மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஷம்சாபாத்தில் டோல் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு, கச்சிபௌலி பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.

இரவு 7:22 மணியளவில் கச்சிபௌலியிலிருந்து ஷம்சாபாத் டோல் பகுதிக்கு திரும்ப வந்துள்ளார். அப்போது அவருடைய இருசக்கர வாகனத்தில் பின்டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக லாரி ஓட்டுநர் ஒருவர் மாதுரியிடம் கூறியுள்ளார்.

மேலும், தானே சரி செய்து தருவதாக லாரி ஓட்டுநர் கூறியுள்ளார். எவ்வளவோ முயன்று பார்த்தும் லாரி ஓட்டுநர் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவில்லை.

நிலைமை சரி இல்லாததை உணர்ந்த மாதுரி தன்னுடைய சகோதரியான ரம்யாவுக்கு கால் செய்துள்ளார். நிகழ்ந்தவற்றை கூறியவுடன் ரம்யா அவரை டோல் பகுதியில் நிற்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாதுரி தனக்கு மிகவும் பயமாக உள்ளது என்றும், விரைவில் வந்து காப்பாற்றும் மாறும் அழுது புலம்பியுள்ளார். 

ரம்யா தன்னுடைய உறவினர்களுடன் டோல் பகுதியில் சென்று பார்த்தபோது, மாதுரியை காணவில்லை. மேலும் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்துள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதிகாலை 3 மணி வரை மாதுரியை உறவினர்கள் தேடினர். ஆனால் அவர்களால் மாதுரியை தேடி கண்டுபிடிக்க இயலவில்லை. அதன் பின்னர் ஷாத்நகர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

காலை 7 மணியளவில், அப்பகுதியில் உள்ள சப்வேக்கருகே மாதுரியின் சடலத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவருடைய சடலத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தொடங்கியுள்ள காவல்துறையினருக்கு இதுவரைக்கும் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.