ஆமாம் அழுக்காருப்போம்! கருப்பா..! கலையாருப்போம்! தளபதில் குரலில் பிகில் சிங்கிள் டிராக்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிகில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஏஜிஎஸ் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு யூட்யூப் வீடியோவை சேர் செய்துள்ளது. அதில் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

ரசிகர்களை மனதில் குடியிருக்கும் சனம் என்று விஜய் பாடும் இந்த பாடலில் வரிகள் அனைத்தும் ஜனரஞ்சமாகவும் தெறிக்கவிடும் வகையிலும் உள்ளது.