வேலூரில் தேர்தல் ரத்து! துரைமுருகன் மகன் 25 ஆண்டுகள் தேர்தலுக்கு நிற்க முடியாது?

வேலூரில் பணம் பிடிபட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் பிரசாரம் கடைசி கட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டாலினுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கிறார்கள்.


நேற்றைய தினமே பெரும்பாலான ஊர்களில் அ.தி.மு.க.வினர் பணம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வினர் கொடுப்பதைப் பார்த்துவிட்டு பணம் கொடுப்பதற்கு தி.மு.க.வினர் தயாராக இருந்தனர். இந்த நிலையில்தான், திடீரென வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது வேறு எங்கு தி.மு.க.வினர் பணம் சப்ளை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டாலும் சிக்கல் வரும் என்பதை மறைமுகமாக சொல்லும் எச்சரிக்கைதான் இந்த நடவடிக்கை என்கிறார்கள். இந்தத் தேர்தல் ரத்து செய்யப்படும் என்பதை அறிந்துதான், அ.தி.மு.க. கூட்டணியினர் வேலூர் தொகுதியில் மந்தமாக பிரசாரம் செய்துவந்தனர்.

மற்ற தொகுதிகளில் பணம் கொடுத்தாலும், வேலூர் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. மட்டும் பணம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க. முதல் ரவுண்ட் பணம் கொடுத்துவிட்டது. அதனால் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அறிந்து துரைமுருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என்றும் நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் கொந்தளித்திருக்கிறார். இன்று பணம் கொடுப்பதா, வேண்டாமா என்பதுதான் தி.மு.க.வினர் குழப்பம்.

இந்த நிலையில், ஆதாரபூர்வமாக கதிர் ஆனந்த் விவகாரத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி 25 ஆண்டுகள் தேர்தலில் நிற்க விடாமல் செய்வோம் என்று அ.தி.மு.க. சபதம் எடுத்துவருகிறது. ஆக, கதிர் ஆனந்துக்கு காலம் எல்லாம் சிக்கல்தான்.