அன்புமணி போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து களம் இறங்குகிறார் காடுவெட்டி குரு தாயார்!

நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவறை எதிர்த்து குருவின் தாயார் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் மாவீரன் காடுவெட்டி குரு வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய சங்கத்தின் நிறுவனர் மணிகண்டன், அன்புமணி ராமதாஸ் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணிஅம்மாள் எதிர்த்து போட்டியிடுவார்,

7தொகுதிகளிலும் பாமக தோற்பது உறுதி, ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் இழிவு படுத்திவருகின்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி பற்றி கடல் இருக்கும் வரை, பார் இருக்கும் வரை கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது எதற்காக கூட்டணி அமைத்தனர் என்று கேள்வி எழுப்பினார் மணிகண்டன். மேலும் பா.ம.கவை ஒழிப்பது தான் குரு வன்னியர் சங்கத்தின் முதல் வேலை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அன்புமணியை எதிர்த்து குருவின் மகன் கனலரசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் குருவின் தாயாரே களம் இறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பா.ம.க வட்டாரங்களில் பதற்றம் நிலவுகிறது.