என் கணவர் அந்த விஷயத்தில் கில்லி..! அதான் வனிதா மயக்கிட்டா! முதல் மனைவி பகீர்!

நடிகை வனிதா தான் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்காகத்தான் என் கணவரை மயக்கி திருமணம் செய்து கொண்டுள்ளார் என பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார்.


பிரபல பிக் பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் இவர்களின் திருமணம் கடந்த 27ஆம் தேதி நடிகை வனிதாவின் வீட்டில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிதாக நடைபெற்றது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி கடந்த 19ம் தேதி வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று புகார் அளித்திருந்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் உள்ளதாகவும், பள்ளியில் படித்து வரும் ஒரு மகள் இருப்பதாகவும் அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பாலின் முதல் மனைவி வேண்டுமென்றே மறைமுகமாக பணம் பறிக்கும் நோக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: என்னுடைய கணவர் அவரது வேலையில் மிகவும் திறமைசாலி. அதன் காரணமாகத்தான் வனிதா தன்னுடைய யூடியூப் சேனலை தொடர்ந்து நடத்துவதற்காக எனது கணவரை மயக்கி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபத் ஹெலன் கூறியுள்ளார்.

முன்னதாக நடிகை வனிதா பீட்டர்பாலை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில் நன்றாக போய்க் கொண்டிருந்த என்னுடைய யூடியூப் சேனல் லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கேமராமேன்கள் மற்றும் எடிட்டர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விடுமோ என்று கலக்கத்தில் இருந்ததாகவும் அந்த சமயத்தில் தான் பீட்டர் பால் தனக்கு உதவி செய்து தன்னுடைய யூட்யூப் சேனல் நடத்த கேமராமேனாக இருந்து உதவியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.