ஒரு பக்கம் முதல் மனைவி..! மறுபக்கம் லட்சுமி ராமகிருஷ்ணன்..! பெரும் பஞ்சாயத்தான வனிதாவின் 3வது திருமணம்! எப்படி?

பிரபல நடிகையொருவர் செய்துகொண்ட 3-வது திருமணத்திற்கு எதிராக லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


பிரபல குணச்சித்திர நடிகரான நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் 90-களில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். சென்ற ஆண்டு "உலக நாயகன்" கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய "பிக் பாஸ்"  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் 3-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது முதலில் நடன இயக்குனர் ஒருவருடன் இவர் காதல் ஈடுபட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அவற்றை வனிதா மறுத்தார். தற்போது அவர் பீட்டர் பால் என்ற இளைஞரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். 

அதாவது, "அனைவருக்கும் இன்னொரு வாய்ப்பு கிட்டுவது அரிது. நான் தற்போது ஒரு புதிய உறவின் தொடக்கத்தில் உள்ளேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். பீட்டர் பால் என்னுடைய கனவிலிருந்து நேரடியாக வந்தவர். என்னிடம் இல்லாத ஒரு வெற்றிடத்தை வெளிக்கொண்டு வந்தபிறகு அதனை நிரப்பியவர். அவருடன் இருக்கும்போது நான் பாதுகாப்பாக கருதுகிறேன். நண்பராக என்னுடைய வாழ்வில் நுழைந்து சுகதுக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு தற்போது காதலராக மாறியுள்ளார்" என்று பதிவிட்டிருந்தார்.

இவருடைய முடிவிற்கு இவரின் இரண்டு மகள்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில், இது திருமணத்திற்கு எதிராக பீட்டர் பாலின் முதல் மனைவியான ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது முதல் மனைவியை சரியாக விவாகரத்து செய்யாமல், எவ்வாறு அடுத்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற  குற்றச்சாட்டை ஹெலன் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ளார். 

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள வனிதா, "பீட்டர் பால் கடந்த 8 வருடங்களாக தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மூத்த மனைவியின் ஒரு பெண்தானே. அவரை யாரோ கொம்பு சீவி விட்டு எங்களிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கின்றனர். சட்டரீதியாக இந்த குற்றச்சாட்டை நாங்கள் இணைந்து எதிர்கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

வனிதாவின் திருமண புகைப்படங்களை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதாவது, "முதல் மனைவியை சரிவர விவாகரத்து செய்யாத நிலையில், எவ்வாறு பீட்டர் பால் 2-வதாக திருமணம் செய்து கொள்ள முடியும். எவ்வாறு இந்த திருமணம் அனுமதிக்கப்பட்டது" என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வனிதா - பீட்டர் பால் திருமணத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.