3வது திருமணம் செய்து கொள்ளப்போகும் 40 வயது பிக்பாஸ் வனிதா..! அதற்கு அவரது 15 வயது மகள் என்ன சொன்னார் தெரியுமா?

பிரபல நடிகையொருவர் 3-வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


பிரபல குணச்சித்திர நடிகரான நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் 90-களில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். சென்ற ஆண்டு "உலக நாயகன்" கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய "பிக் பாஸ்"  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் 3-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது முதலில் நடன இயக்குனர் ஒருவருடன் இவர் காதல் ஈடுபட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் அவற்றை வனிதா மறுத்தார். தற்போது அவர் பீட்டர் பால் என்ற இளைஞரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதாவது, "அனைவருக்கும் இன்னொரு வாய்ப்பு கிட்டுவது அரிது. நான் தற்போது ஒரு புதிய உறவின் தொடக்கத்தில் உள்ளேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். பீட்டர் பால் என்னுடைய கனவிலிருந்து நேரடியாக வந்தவர். என்னிடம் இல்லாத ஒரு வெற்றிடத்தை வெளிக்கொண்டு வந்தபிறகு அதனை நிரப்பியவர். அவருடன் இருக்கும்போது நான் பாதுகாப்பாக கருதுகிறேன். நண்பராக என்னுடைய வாழ்வில் நுழைந்து சுகதுக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு தற்போது காதலராக மாறியுள்ளார்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இவருடைய மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்துள்ளீர்கள். கடந்த 15 வருடங்களில் நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆதலால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நான் துணை நிற்பேன்" என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது‌