லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது குழுவினர் பயன்படுத்திய சொகுசு வேன் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளது.
எய்ட்ஸ் முருகன் கொள்ளையடிக்க, வேவு பார்க்க சொகுசு வேன்..! அதற்குள் இருந்த உல்லாச வசதிகள்..! போலீசிடம் சிக்கிய பரிதாபம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து முருகன் என்பவர் கொள்ளை அடித்தார் . முருகன் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்தது போலவே பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த கொள்ளையடித்த வழக்கில் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக உயரதிகாரிகள் பலருக்கும் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது .
மேலும் முருகனும் அவரது கொள்ளை கூட்டமும் இணைந்து தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. முருகனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து லலிதா ஜுவல்லரி திருடியதை போலவே மதுரையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 470 சவரன் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.
கொள்ளையடித்து அந்த நகையை உருக்கி விற்று அந்த பணத்தை வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். முருகன், சுரேஷ் உள்ளிட்ட கும்பல் உல்லாசமாக இருப்பதற்காக ஒரு சொகுசு வேனை பயன்படுத்தி வந்துள்ளனர். போலீசார் முருகனிடம் நடத்திய தீவிர விசாரணையில் மூலம் அவர்கள் பயன்படுத்திய சொகுசு வேன் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்து உள்ளனர். அந்த வேனில் கடப்பாரை ,கட்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர், எடை போடும் இயந்திரம், கயிறு உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
மேலும் அவர்கள் உல்லாசமாக இருப்பதற்காக சொகுசு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இந்த கொள்ளைக் கும்பல் கொள்ளை அடித்த உடன் சுற்றுலாபயணிகள் போல் அந்த வேனில் சுற்றித் திரிவர் என்று விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.