அசுர வேகத்தில் மோதிய லாரி.. ! தூக்கி வீசப்பட்ட வேன்! மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய 19 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

லாரி மீது வேன் மோதியதில் 19 பேர் படுகாயமடைந்த சம்பவமானது தியாகதுருகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த 18 பேர் மேல்மருவத்தூருக்கு கோவிலுக்கு சென்றனர். மேல்மருவத்தூரில் கோவில் தரிசனத்தை சிறப்பாக முடித்தபின்னர் அனைவரும் அதே நாளில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். 

இந்த தானே கோபிசெட்டிபாளையத்தில் அருகேயுள்ள எருமைக்காரன்பாளையம் சேர்ந்த கார்த்தி(25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அமைந்துள்ள பிரிதிவிமங்கலம்  மேம்பாலத்திற்கருகே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வேனுக்கு முன்னால் தியாகதுருகத்திலிருந்து ஈரோடு நோக்கி மக்காச்சோளத்தை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. வேன் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் வேன் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் வேனில் சென்ற 19 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துரதிஸ்டவசமாக சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் கார்த்திக் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.