வயதுக்கு வராத பெண்கள் மட்டும் தான் குறி! பேஸ்புக் போட்டோக்களை வைத்து தொழில் அதிபர் மகன் காம விளையாட்டு!

இளம் பெண்களின் படங்களை ஆபாசப் படங்களுடன் மார்ஃபிங் செய்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் .


சான்டாகுரூசை அடுத்த வகோலா காவல் நிலையத்தில் வயது வராத இரண்டு சிறுமிகள் அளித்த புகாரில் ஒரு நபர் தங்களது படங்களை மார்ஃபிங் செய்து ஒரு நபர் மிரட்டுவதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் இளம் பெண்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து இளம் பெண்களின் படங்களைத் திருடி அவற்றை மார்ஃபிங் செய்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியது தெரியவந்தது. 

இணையதளங்களை ஆய்வு செய்த போது அந்த நபரின் பெயர் ஜனம் பார்வெல் என்று தெரியவந்தது. ஆனால் அந்த நபர் இளம்பெண்களை தொடர்புகொள்ளவும் ஆப்களை பயன்படுத்திவந்த நிலையில் அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஒருமாத தேடலுக்குப் பின் அவன் வகோலாவில் வசிக்கும் அவன் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் 20 வய்து மகன் என்றும் அவன் அகமதாபாத்தில் இருப்பதையும் கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவனை கைது செய்தனர். 

ஜனம் பார்வெல் வயதுக்கு வராத இளம்பெண்களைக் குறிவைத்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இதே பாணியில் வேறு யாரேனும் பெண்களுக்கு மிரட்டல் வந்ததா என இளம் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புகார் அளிக்கும்படி கேட்டூக்கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.