வைரமுத்துவை அசத்திய முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கும் கவிஞர் வைரமுத்து, ஒரு வித்தியாசமான விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகளை சந்திக்கச் சென்றாலே சில பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கும் கவிஞர் வைரமுத்து, ஒரு வித்தியாசமான விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகளை சந்திக்கச் சென்றாலே சில பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.

அதற்கேற்ப முன்கூட்டியே சென்றுவிடுவார்கள். பார்த்துவிட்டு வருவதற்கு கூடுதல் நேரமும் ஆகிவிடும். ஆனால், வைரமுத்து அவரது சந்திப்பு குறித்து ஆச்சர்யப்பட்டுள்ளார்.

அவரது பதவில், ‘முதலமைச்சரை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன் குறித்த நேரம் காலை 10.15 நான் அடைந்த நேரம் 10.14 முதலமைச்சர் வந்து வரவேற்ற நேரம் 10.15 நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன் பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது வயது கூடக் கூட மரம் வைரம் பாய்வது மாதிரி’ என்று பாராட்டியிருக்கிறார்.

நேரத்தின் அருமையை இருவரும் உணர்ந்திருக்கிறார்கள்.