குடியுரிமை திருத்த மசோதாவை வங்கக்கடலில் தூக்கி எறியுங்கள்!! வைகோ அதிரடி..!

மாநிலங்களவையில் நேற்றையதினம் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மதிமுக பொது செயலாளர் வைகோ அந்த மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் என்று கடும் சினத்துடன் கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையிலும் நேற்றைய தினம் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து பல கட்சித் தலைவர்களும் மாநிலங்களவையில் குரலெழுப்பினர் . அதிலும் குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய பதிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, இந்த சட்டம் நம் சமூகத்தில் வசிக்கும் ஒரு பிரிவினரை மட்டும் தனித்து எதிரிகளாக காட்ட முயல்கிறது. பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்கள் ஆவர். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கே இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

ஆனால் இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களுக்கு இந்த குடியுரிமை சட்டம் எந்த ஒரு நன்மையும் பயக்கவில்லை. ஆகையால் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் பற்றி கவலை கொள்ளாத இந்த குடியுரிமை சட்டத்தை தூக்கி வங்ககடலில் வீசுங்கள் என்று வைகோ கடுமையாக விவாதித்தார்.