திருமணமான பத்தே நாளில் விவகாரத்து..! விஜே ரம்யா கணவனை பிரிய காரணம் மணிரத்னம்? அவரே வெளியிட்ட தகவல்!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா, திருமணமாகி பத்தே நாட்களில் தன் கணவரை பிரிந்ததற்கு என்ன காரணம் என்பதை அவரே மனம் திறந்து கூறியிருக்கிறார்.


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே ரம்யா சுப்ரமணியம். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கேடி பாய்ஸ் கில்லடி கிர்ல்ஸ் என பல நிகழ்ச்சிகளை அதே தொலைக்காட்சியில் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இவர் தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர ஆரம்பித்தது.

இதன் மூலம் ரம்யா பிரபல நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து இவர்கள் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாசு என்கிற மாசிலாமணி , மங்காத்தா போன்ற திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து நடிகையாக மாறினார்.

 சமீபத்தில் இவரது நடிப்பில் கேம் ஓவர், ஆடை போன்ற திரைப்படங்களும் வெளியானது. இந்த திரைப்படங்களும் நடிகை ரம்யா அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதற்கிடையில் ரம்யா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பத்தே நாட்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து கடைசியில் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றதை அடுத்து ரசிகர்கள் பலரும் ரம்யா நடிக்க சென்றதால் தான் அவருக்கு கணவருடன் விவாகரத்து ஏற்பட்டது என கூற ஆரம்பித்தனர். 

அதிலும் ஒரு சிலர் ஓ காதல் கண்மணி திரைப்படம் தான் இவருடைய விவாகரத்துக்கு காரணம் எனவும் கூறி வந்தனர். இதனையடுத்து ரம்யா தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து கூறியிருக்கிறார். முதலில் எங்களுடைய திருமணம் காதல் திருமணம் கிடையாது.

வீட்டில் பார்த்து பேசி தான் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்த பத்தே நாட்களில் எங்கள் இருவருக்குமிடையில் சரி வராது என்று எண்ணம் வந்தது. ஆகையால் தான் நாங்கள் இருவரும் பேசிக் சமாதானமாக பிரிவதற்கு முடிவெடுத்தோம்.

இதனையடுத்து நான் என் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன். பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம். எனக்கு திருமணம் நடந்து விவாகரத்து நடைபெற்றது கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும். ஆனால் எனக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது 2015 ஆம் ஆண்டு ஆகும். 

பிறகு எப்படி என்னுடைய விவாகரத்திற்கு இந்த திரைப்படம் தான் காரணம் என்று நீங்கள் கூறலாம் என நடிகை ரம்யா கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆகையால் நான் நடித்ததற்கும் என் கணவரை பிரிந்ததற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என நடிகை ரம்யா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை ரம்யா தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.