ஒரே நேரத்தில் 2 பெண்கள்..! 1 மணி நேரத்திற்கு ரூ.3000! நாகர்கோவிலை கலக்கும் ஹைடெக் விபச்சாரம்!

நாகர்கோவில்: மசாஜ் சென்டரில் மஜாவாக இருந்த விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.


நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இயங்கும் ஒரு மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணிப்பு நடத்தும்படி  காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.  

தனிப்படையினர் அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்ததில், பல விஐபிக்கள் அங்கு வந்து செல்வதை உறுதி செய்தனர். பிறகு அதிரடியாக, மசாஜ் சென்டரில்  நுழைந்து நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, மசாஜ் சென்டரை நடத்தி வந்த அலெக்சாண்டர் மற்றும் 3 இளம்பெண்களை கைது செய்தனர்.

அந்த பெண்கள், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அந்த பெண்களை வைத்து, ஆன்லைனில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து மசாஜ் தொழிலை அலெக்சாண்டர் நடத்தி வந்திருக்கிறார். அவருக்கு உதவியாகச் செயல்பட்ட மகேஷ் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.  

கேரளாவைச் சேர்ந்த அலெக்சாண்டர், மசாஜ் செய்ய ஆசைப்பட்டு வரும் விஐபிக்கள், காவல் அதிகாரிகள் பலரை நைசாக பேசி விபசாரத்திலும் ஈடுபட செய்துள்ளார். அதற்காக, 45 நிமிடங்களுக்கு ரூ.1500, ஒரு மணிநேரத்திற்கு ரூ.2000, ஒன்றரை மணிநேரத்திற்கு ரூ.3000 (2 இளம்பெண்கள்), 2 மணி நேரத்திற்கு ரூ.3500 (3 இளம்பெண்கள்) போன்ற ரகங்களில் கட்டணம் வசூலித்துள்ளார்.

இதையடுத்து, பிடிபட்ட 3 இளம்பெண்களை நாகர்கோவிலில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அலெக்சாண்டரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மசாஜ் சென்டருக்கு பல தொழிலதிபர்கள், விஐபிக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி வாடிக்கையாளராக வந்துபோன விவரமும் கிடைத்துள்ளது.

அவர்களை ஈர்க்கும் வகையில்  ஏசி வசதி, சொகுசான படுக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டிருக்கின்றன. மசாஜ் சென்டரில் வைத்துள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் நாகர்கோவில்  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.