கணவன் கற்பழிப்பான்! மனைவி வீடியோ எடுப்பாய்! இளம் பெண்களை குறிவைக்கும் கொடூர தம்பதி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு இளம் பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யபட்டு; படம் பிடிக்கப்பட்டு அதனைக் கொண்டு மிரட்டப்பட்டு மேலும் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.


முசாஃபர் நகரைச் சேர்ந்த 20களில் தொடக்க வயதுகளில் உள்ள இரு இளம் பெண்கள் ஒரு தம்பதியால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்களை கணவன் பாலியல் பலாத்காரம் செய்ய அதனை அவனது மனைவி படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மேலும் சிலருக்கும் இணங்க அந்த இரு பெண்களையும் கணவனும் மனைவியும் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண்கள் மறுக்க, பதிவு செய்யப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணியச் செய்திருக்கின்றனர். 

மேலும் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் கணவனையும், மனைவியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.