மணமேடையில் மயங்கிய மணப்பெண்..! தொட்டுப் பார்த்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! திருமண வீட்டில் பகீர் சம்பவம்!

12 மணிநேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்த சோக சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து திருமண நிகழ்ச்சிகள் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமேடையில் மணமக்களுக்கு திருமண சடங்குகள் நடைபெற்றன. சஞ்சய்யும், வினிதாவும் மணமேடையில் அமர்ந்திருக்க மந்திரங்கள் முழங்கப்பட்டன. அப்போது வினிதா திடீரென மேடையில் மயங்கி சுருண்டு விழுந்தார் இதை பார்த்த திருமண வீட்டார் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக வினிதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனினும் அவரை காப்பாற்றமுடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண் எதிரிலேயே வருங்கால மனைவி வினிதா உயிரிழந்ததை பார்த்து சஞ்சய் கதறி அழுதார்.

அவர் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வினிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வினிதாவின் உடல் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. திருமணக் கோலத்தில் இருக்க வேண்டிய வினிதா பிணக்கோலத்தில் மாறியதால் அவர்கள் வீடும் துக்க வீடாக மாறியதை பார்த்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.