போலீஸ் உயர் அதிகாரி - இளம் பெண் அமைச்சர் இடையிலான செல்போன் ஆடியோ வைரல்..! யார், என்ன தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய பெண் அமைச்சர் சுவாதி சிங்கை கண்டித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்து வரும் சுவாதி சீங் உத்தரப்பிரதேசத்தில் செயல் பட்டு வரும் அன்சால் குழுமத்திற்கு எதிராக லக்னோவில் உள்ள காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என்றும் வழக்கை விசாரிக்காமல் கை விடும்படியும் போலீஸ் உயர் அதிகாரியை பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல் தொலைபேசி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அமைச்சர் சுவாதி சிங் போலீஸ் உயர் அதிகாரியை மிரட்டிய ஆடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது . ஆடியோ பதிவை கேட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த ஆடியோ பதிவுக்கான சரியான விளக்கம் அளிக்க வேண்டி அமைச்சர் சுவாதி சிங்குக்கு சம்மன் அனுப்பி உள்ளார்.

தற்போது இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.