எடப்பாடி அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டு... கொரோனா கட்டுப்படுத்தலில் சூப்பரோ சூப்பர்

விரைவில் இந்திய நாடு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்பட இருக்கும் நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சென்னைக்கு வந்தார்.


சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து ஒத்திகை மையங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். இதற்கும் முன்னர், நம் நாட்டிலுள்ள நான்கு தேசிய தடுப்பு மருந்து சேமிப்பகங்களில் ஒன்றான பெரியமேட்டில் உள்ள பொது மருந்து சேமிப்பகத்தை மத்திய சுகாதார அமைச்சர் பார்வையிட்டார். 

அதன்பிறகு தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், தடுப்பு மருந்து விநியோகத் திட்டம் குறித்து ஆலோசித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.

‘‘முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு தடுப்பு மருந்து வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படும். குறுகிய காலத்தில் நம்மால் தடுப்பு மருந்தை தயாரிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசரகால பயன்படுத்தல் உரிமையை தற்போது வழங்கியிருக்கிறோம்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். 100 சதவீத ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை செய்து சவாலான நிலைமையை தமிழகம் சமாளித்தது. வைரஸ் பரவலை தமிழ்நாடு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது’’ என்று பாராட்டிப் பேசினார்.

மேலும், ‘‘தமிழக முதல்வருடன் தாய் சேய் நலத்திட்டம், பேறுகால இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினே‘ என்று பேசினார்.

சூப்பர்தான்.