மு.க.ஸ்டாலின் சொன்னால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவேன்! உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று திமுக இளைஞரணி மாநில செயலர் மற்றும் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


திரைத்துறையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு சில வருடம் முதல் அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்காக வித்தியாசமான பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் தற்போது திமுகவில் மாநில இளைஞரணி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே சென்னை மேயர் தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் நிற்கப் போகிறார் என்று பல்வேறு விதமான வதந்திகள் பரவியது. மேலும் திமுகவினர் சிலர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக போட்டியிட வேண்டுமென்ற விருப்பம் மனமும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதா நூலகத்திற்கு நேற்றிரவு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். பின்னர் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி அந்த உலகத்தில் உறுப்பினராகவும் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

பின்பு அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் சொன்னாள் நான் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.