சுறாவின் வாயில் சிக்கிய இளம் மகள்! ஓங்கி 5 குத்துகள் விட்டு காப்பாற்றிய வீரத் தந்தை!

பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகளை தாக்க வந்த சுறாவிடமிருந்து தன் மகளை காப்பாற்ற சுறாவின் வாயில் ஐந்து முறை குத்தி சுறாவின் பிடியிலிருந்து காப்பாற்றி உள்ளார்.


அமெரிக்காவின் நார்த் கரோலினா வீட்டில் தனது விடுமுறையை கழிப்பதற்காக பேச் வின்டர் எனும் 17 வயது மாணவி தனது குடும்பத்துடன் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று அருகிலுள்ள கடற்கரைக்கு விளையாட சென்றுள்ளார். அப்போது கடலின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த சுறா அவரை நெருங்கி வந்தது

இந்நிலையில் அலறி அடித்துக்கொண்டு அவர் முன்னே செல்ல முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றார். உடனே கூச்சலிட ஆரம்பித்தார், அதை பார்த்து அவரது தந்தை உடனே அலறி அடித்துக்கொண்டு தன் மகளை நோக்கி விரைவாக சென்றுள்ளார்

அப்போது சுறா பேச் வின்டரின் கால்களை கவ்வியது. இதையடுத்து அங்கு வந்த தந்தை சுராவின் முகத்திலேயே ஐந்து முறை குத்தி விட்டு நிலைகுலையச் செய்துள்ளார். இதனால் வின்டரின் கால்களை சுறா விடுவித்துள்ளது. பிறகு தன் மகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பேச் வின்டருக்கு காலில் பலமான காயமும், முட்டியில் சிறு காயமும் கைவிரல்களில் சிராய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் ஒரு காலை அகற்றியுள்ளனர். மேலும் சில விரல்களையும் நீக்கியுள்ளனர். ஆனால் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை அவர் தற்போது நல்ல நிலையில்தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது பாட்டி கூறுகையில் தன் மகன் மிகவும் சிறப்பான முறையில் சுறாவின் முகத்தில் ஐந்து முறை குத்தி விட்டு அதனை தள்ளி விட்டு எனது பேத்தியை காப்பாற்றி வந்துள்ளார்.

எனது பேத்தி மிக விரைவில்  குணமடைந்து விடுவார். மற்றும் எவரது மகனை பார்த்து பெருமையாக உள்ளது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த செய்தியானது மிக விரைவில் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் மகளை காப்பாற்றிய அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.