வீட்ல யாருங்க? காலிங்க பெல்லை அழுத்திய முதலை! பதறிய பெண்கள்!

அமெரிக்காவில் முதலை ஒன்று வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியவீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


சும்மா கற்பனை செய்து பாருங்களேன். ஆறரை அடி நீள ராட்சத முதலை ஒன்று உங்கள் வீட்டு வாயிலில் படுத்துகொண்டு மிரட்டினால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று. கலிஃபோர்னியா மாநிலம் மிர்ட்டில் பீச் என்ற இடத்தைச் சேர்ந்த கெரென் அல்ஃபனோ என்ற பெண் அப்படி ஒரு திகில் அனுபவத்துக்குத் தான் ஆளானார். 

வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு ஒரு அதிர்ச்சி அனுபவம் காத்திருந்தது. அவரது வீட்டுக்கு வெளியே ஒரு அழையா விருந்தாளி காத்திருந்தார். ஆறரை அடி நீள முதலைதான் அது. அதுமட்டுமன்றி அந்த முதலை வீட்டுச் சுவற்றின் மீது தவழ்ந்து ஏறி காலிங் பெல்லையு அடித்த நிலையில் வீட்டுக்குள் செல்ல முடியமலும் செய்வதறியாமல் தவித்தார் கெரென்.

அந்த முதலை வீட்டுக்கு வெளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய போது நல்லவேளையாக கதவு ஜன்னல்களின் கண்ணாடிகளை விட்டு வைத்ததாகக் கூறுகிறார் கெரன் பின்னர் அந்த முதலையை தொடர்புடைய அலுவலர்கள் வந்து அகற்றி வனத்தில் விட்டனர். இணையதளத்தில் வைரலாகிவரும் இந்தக் காட்சிகளை இதுவரை ஆயிரக்கணகானோர் பார்த்துள்ளனர்.