யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர், தனது வெற்றிக்கு காதலியை காரணமாக கூறியுள்ளார்.
வரலாற்றில் முதல் முறை! கலெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் காதலிக்கு சொன்ன நன்றி!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கனிஷாக் கட்டாரியா. மும்பை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் முதலில் தென் கொரியாவில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் பெங்களூருவில் தரவுகள் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். இதை தொடர்ந்து அவருக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதை உதறித்தள்ளிய கட்டாரியா, மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார். இந்தத் தேர்வில் முதலிடமும் பிடித்து இவர் சாதனை படைத்துள்ளார். தனது இந்த வெற்றிக்கு வழக்கம்போல் தனது பெற்றோரை காரணமாக கூறிய அவர், இதில் தனது காதலியையும் சேர்த்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதுபோன்ற தேர்வில் வெற்றி பெற்ற எவரும் இதற்கு முன்னர் தங்களது வெற்றிக்கு காதலியை காரணம் காட்டியதில்லை. தன்னை இந்திய நாட்டின் அதிகாரி ஆக்குவதற்கு தனது காதலி பெரிதும் உதவியதாகவும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கட்டாரியா கூறியுள்ளார். பொது மக்களுக்கு நல்ல அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதை தனது எண்ணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தனக்கு வேலை கிடைத்த போதும் அதன் மூலம் பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்று நினைத்ததாகவும் நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணியதாகவும் கூறியுள்ள கட்டாரியா, இதன் காரணமாகவே குடிமைப் பணிகள் தேர்வு எழுதியதாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.