நீ மட்டும் ஹெல்மெட் போடமாட்டியா? யூனிபார்மில் இருந்த போலீசை தெறிக்கவிட்ட இளைஞர்!

ஹெல்மெட் அணியாமல் வந்த காவல் துறையினரை இளைஞர் தட்டிக்கேட்டதால் கைகலப்பு ஏற்பட்டு சம்பவமானது பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய மோட்டார் திருத்த மசோதா ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஷிசாக் காலனி என்ற இடமுள்ளது. இந்த காலனியில் கமல் குமார் என்பவர் வசித்துவருகிறார். இரு நாட்களுக்கு முன்னர் ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக ரோஷன் குமார் என்ற காவல்துறை அதிகாரியிடம்  பிடிபட்டார். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ரோஷன் குமார் அங்கிருந்து சென்ற போது, ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். உடனடியாக கமல் குமார், ரோஷன் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்‌. இதனால் ஆத்திரமடைந்த ரோஷன் குமார், கமல்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த சம்பவத்தை அருகிலிருந்தோர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து ரோஷன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.