மருந்து கடையில் மருந்து வாங்க சென்ற இரண்டு இளைஞர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றிருக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CCTV இருப்பது தெரியாமல் மருந்து கடையில் இளைஞர்கள் செய்த விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே படந்தாலுமூடு என்னும் பகுதியில் ரவி மெமோரியல் என்று ஒரு தனியார் மருந்தகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு கடையை அடைக்கும் போது, மருந்தகத்தில் பணி புரியும் பெண்ணொருவர் கணக்கினை சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில், 8300 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதுகுறித்து தன் முதலாளியிடம் அப்பெண் தெரிவித்தார். அவர்கள் இருவரும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். அப்போது திடுக்கிடும் காட்சியை கண்டனர்.
அதாவது மதிய வேளையில் இரண்டு இளைஞர்கள் மருந்து வாங்க வந்துள்ளனர். அந்த பெண் ஊழியர் மருந்தை எடுத்துக் கொடுக்க சென்றபோது, இரண்டு இளைஞர்களும் கல்லாப் பெட்டியிலிருந்து பணத்தை எடுப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
மருத்துவமனை நிர்வாகம் குழித்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து அவ்விரு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மருந்துக் கடையில் பணத்தை திருடிய சம்பவமானது குழித்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது