இளம் பெண்ணின் புடவையை பிடித்து நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற இன்னொரு பெண்!

பெண்ணின் புடவையை பிடித்து இன்னொரு பெண் இரு சக்கர வாகனத்தின் பின்னால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


டெல்லியின் ஜனக்புரியில் உலக மகளிர் தினமான கடந்த 8-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்த பர்சை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் பறித்துச் சென்றனர். அப்போது அந்தப் பெண் பர்சை விடாமல் அவர்களைத் துரத்தினார்.

ஆனால் அந்தக் கொள்ளையர்கள் பர்சையும் விடாமல் இருசக்கர வாகனத்தையும் வேகமாக இயக்கியதால் அதன் வேகத்துக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்தப் பெண் சாலையில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

இவை அனைத்தும் ஒரு காவல் நேய சேவை மையம் அருகிலேயே நடைபெற்றது. மேலும் அங்கிருந்த பலரும் அந்தச் சம்பவத்தை பார்த்தாலும் அந்தப் பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அவர் பர்சை நழுவவிட்டதால் பிடி விலகி உயிருக்கு ஆபத்தின்றித்  தப்பினார். இந்த வீடியோவை பார்க்கும் போது கொள்ளையர்கள் பெண்ணின் புடவையை பிடித்து இழுத்துச் செல்வதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில்  மன்ஜீத் கவுர் என்ற பெண்ணை கைது செய்தனர். அவர் தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணின் பர்சை பறிக்க இவ்வாறு செய்துள்ளது தெரியவந்தது.

முன்னதாக மன்ஜீத் கவுர் அவரது கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.