தாயின் தவறான உடல் சார்ந்த தேடல்! கல்லூரி செல்லும் 2 மகன்கள் கண்ட காட்சி! பிறகு அரங்கேறிய பகீர்! புதுக்கோட்டை அதிர்ச்சி!

வீட்டில் நெருக்கடி அதிகமானதால் பெற்ற தாய் இன்னொரு ஆணுடன் தவறான நட்பு கொண்டு வீட்டை விட்டு ஓடியதால் கல்லூரி படித்து வந்த இரண்டு மகன்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் செம்பாட்டூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு வெங்கடாசலம் மற்றும் ஜெய தீபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்வரன் மற்றும் யோகேஸ்வரன் என்று 2 மகன்கள் உள்ளனர். 22 வயதாகும் விக்னேஸ்வரன் பிகாம் படிப்பையும் 19 வயதாகும் யோகேஸ்வரன் பாலிடெக்னிக் படிப்பையும் பயின்று வருகின்றனர். ஜெயதீபாவிருக்கும் அவரது கணவர் வெங்கடாசலதிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து ஜெயதேவா நமுனா சமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். என்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்த ஜெய தீபா அந்த பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். அவர்கள் வசித்து வந்த அதே பகுதியில் சண்முகம் என்ற நபருக்கு வட்டிக்கு பணம் அளித்திருக்கிறார். பணம் பரிமாற்றத்தின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தவறான பழக்கம் ஆக மாறியுள்ளது. இதனை அடுத்து ஜெயதீபா சண்முகத்திற்கு அதிகளவில் பணம் மற்றும் நகை ஆகியவற்றை அளித்து இருக்கிறார்.

இதுபற்றிய தகவல் அவரது பெற்றோர் மற்றும் மகன்களுக்கு தெரியவந்துள்ளது. இதை அறிந்த அவர்கள் ஜெய தீபாவை கண்டித்துள்ளனர். ஆனாலும் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாத ஜெய தீபா தன்னுடைய ஆண் நண்பர் சண்முகத்துடன் பணம் மற்றும் நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அவரது மகன்கள் விக்னேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோருக்கு தெரிய வரவே அவர்கள் அவமானம் தாங்காமல் நானா சமுத்திரத்தில் இருக்கும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

வெகுநேரமாகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது ஜெய தீபாவின் இரண்டு மகன்களும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணையின்போது தாயினுடைய தவறான பழக்கத்தை அறிந்து அவமானம் தாங்க முடியாமல் தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.