எதிரெதிர் திசையில் அதிவேகம்! நேருக்கு நேர் மோதிய கோரம்! ரத்தம் பார்த்த பைக்கால் 2 பேர் பலி! திருக்கோவிலூர் பரிதாபம்!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள திமிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 28. இவர் இன்று காலை திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த காட்டுச்செல்லூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஷங்கரும் (30), சுரேஷும்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 இருசக்கர வாகனங்களில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 3 பேரையும் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருக்கோவிலூர் பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.