ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வயிற்றுக்குள் வளர்க்கும்போது பல்வேறு பிரச்னைகள் உருவாவது இயற்கைதான். ஒற்றைக் குழந்தையைவிட, கூடுதல் குழந்தைகளை பெற்றெடுப்பதில் அதிக சிரமமும், சிக்கலும் இருக்கின்றன.


              பிரசவத்திற்காக சுருங்கவேண்டிய கர்ப்பப்பையின் செயல்பாடு குறையும்போது ரத்தப்போக்கும், தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

              கர்ப்பப்பை இயற்கையாக சுருங்காதபட்சத்தில் செயற்கை முறை பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டாகிறது.

              நஞ்சுக்கொடி தானாக பிரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் மருத்துவர் இதனை தானாக அகற்றவேண்டிய நிலை ஏற்படும்.

              குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய அளவுக்கு பால் சுரப்பு இல்லாமல் போவதற்கு அல்லது மிகவும் குறைவாக சுரப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற அனைத்து பிரச்னைகளையும் இன்று எளிதில் தீர்த்துவிட இயலும்இரட்டைக் குழந்தைகள் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு நிம்மதியான ஓய்வும் போதிய உணவும் அவசியம் ஆகும். அப்போதுதான் தாய்க்கு போதுமான தாய்ப்பால் சுரப்பு ஏற்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உணவும் கிடைக்கும்.