ஆன்லைன் வகுப்புனு போனாலுங்க..! வீட்டு மொட்டை மாடி அறையில் சடலமாக தொங்கிய 17 வயது இரட்டை சகோதரிகள்! காட்பாடி பகீர்!

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடி சென்றார் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் காட்பாடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மெட்டுக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் சிவல் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கௌரி. இத்தம்பதியினருக்கு பத்மகுமார் என்ற மகனும் பத்மபிரியா, ஹரிப்பிரியா என இரட்டை மகள்களும் உள்ளனர்.

பத்மகுமார் கிங்ஸ்டன் கல்லூரியில் இன்ஜினியரிங் பயின்று வருகிறார். இரட்டை சகோதரிகள் பன்னிரண்டாம் வகுப்புக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். 12-ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் 2 நாட்களுக்கு முன்பிலிருந்து தொடங்கியுள்ளன. 

இதற்காக இரட்டை சகோதரிகள் இருவரும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு கடந்த 2 நாட்களாக சென்று படித்து வந்தனர். அதேபோன்று நேற்று காலை 9:30 மணிக்கு இருவரும் அதே அறைக்கு சென்றுள்ளனர். மதியம் நெடுநேரமாகியும் கீழே இறங்கி வராததால் தாய் கௌரி மேல் தளத்திற்கு சென்று பார்த்துள்ளார். 

கதவு உள்தாழிட்டிருந்ததால் சந்தேகித்த கௌரி ஜன்னல்களை திறந்து பார்த்தார். அப்போது மகள்கள் இருவரும் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கௌரியின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். உடனடியாக காட்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சகோதரிகளின் உடல்களை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டையர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. உணவு சரியாக சமைக்காமல் இருப்பதாகவும், இரட்டையர்களை அடிக்கடி கடிந்து கொள்வதாகவும் காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.