தண்டவாளத்தில் கல்லை போட்டு ரயிலை கவிழ்க்க சதி! முத்துநகர் எக்ஸ்பிரஸ் நூலிழையில் தப்பியது!

மதுரை, திருமங்கலம் இரயில் நிலையத்தில் இரயிலை கவிழ்க்க 4 அடி உயர கல்லை மர்ம நபர்கள் போட்டு வைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு இரவு 11.30 மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியை இரயில் கடந்து சென்றது. அப்போது ரெயில் என்ஜின் பெரிய கல் மீது மோதுவது போன்ற பலத்த சத்தம் கேட்டதாகவும் இருப்பினும் என்ஜின் டிரைவர் இரயிலை  நிறுத்தாமல் சென்றுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று சிவரக்கோட்டை தண்டவாள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தண்டவாளத்தின் மீது கற்கள் இங்குமங்குமாக சிதறி கடந்துள்ளது, 

விசாரணையில் மர்ம நபர்கள் வேலிக்கு போடும் 4 அடி நீளமுள்ள கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் இரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை அடுத்து திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் நடந்த இந்த சம்பவம் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தபட்டு வருகின்றது