மிரட்டிய டிரம்ப் - பணிந்த மோடி..! காரணமான ஹைட்ராக்சிகுளோரோகுவின் மருந்து என்றால் என்ன? பரபர ரிப்போர்ட்!

கொரனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தை வழங்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மருந்துகள் ஏற்றுமதி செய்வதாக இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா தற்போது அமரிக்காவிலும் ஆட்டம் காண வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்த நிலையில் கிட்டத்தட்ட 12,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 21 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர். கொரனா பாதிப்புக்கு மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த சூழ்நிலையில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்து ஓரளவு கட்டுப்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததை அடுத்து அனைத்து நாடுகளும் அந்த மருந்துக்காக தற்போது காத்துக் கிடக்கின்றன.

அணுஆயுதங்கள், போர் விமானங்களில் வல்லரசான நாடுகள் கூட இன்று மாத்திரைக்காக தவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மருந்து அதிகபட்சமாக இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படுவதால் பிரதமர் மோடி அவர்கள் அந்த மாத்திரையை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கொரனா குணப்படுத்தும் அந்த மருந்தை இந்தியா தங்களுக்கு வழங்கவேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே இந்தியாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யும் என பிரமர் மோடி தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்து, வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.இதற்கிடையே இந்தியாவை நம்பியிருக்கும் மற்ற நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்யப் போவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.