ரோபோடிக் எந்திரத்தால் சுர்ஜித்தை மீட்க முடியாதது ஏன்? ஆரம்பத்தில் நிகழ்ந்தது என்ன? சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

சுர்ஜித்தை மீட்பதற்காக போராடிய தருணங்களை மணிகண்டன் கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்குட்பட்ட நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் 25-ஆம் தேதி இரவன்று ஆழ்துளை கிணற்றில் தவறி சுர்ஜித் தவறி விழுந்தான். எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் 80 மணி நேரங்களுக்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்து மீட்பு படையினரால் மீட்கப்பட்டது.

பல்வேறு முயற்சிகளில் மதுரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மணிகண்டனின் வயது 44. ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்காக ரோபோட்டிக் இயந்திரத்தை வடிவமைத்தேன். சங்கரன்கோவிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை இந்த இயந்திரத்தின் மூலம்தான் காப்பாற்றினேன். சம்பவத்தன்று 8 மணியளவில் நான் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றேன்.

என்னுடைய இயந்திரத்தின் அகலமானது கூறிய நகரத்தை விட பெரிதாக இருந்தது. உடனடியாக மணப்பாறை நிறுவனத்திற்கு விரைந்து 8 அடி அகலத்திலிருந்த இயந்திரத்தை 4.5 அடியாக குறைத்தேன். குழைத்த பிறகும் குழிக்குள் இயந்திரத்தை சரிவர செலுத்த இயலவில்லை. இயந்திரத்தை உள்ளே செலுத்தி குழந்தையின் தலையை பிடிப்பதற்கு முயற்சித்தோம். ஆனால் அது எளிதாக நடக்கவில்லை.

அதற்குள் குழந்தையானது கொஞ்சம் கொஞ்சமாக கீழே சென்று கொண்டிருந்தது. இதுவரை மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இடங்களிலிருந்த ஆழ்துளை கிணற்றின் சுற்றளவு அதிகமாகவே இருந்தது. அந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இவற்றை நான் வடிவமைத்தேன். இனி எந்த குழந்தையும் இவ்வாறு ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த போகாமல் இருப்பதற்கு பல அளவுகளில் இயந்திரங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளேன்" என்று கூறினார்.